மகளுக்கு உணவு வாங்க பணம் இல்லாததால் மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற ஐடி நிறுவன ஊழியர் கைது

by Editor / 28-11-2022 08:48:55am
மகளுக்கு உணவு வாங்க பணம் இல்லாததால் மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற ஐடி நிறுவன ஊழியர் கைது

பெங்களூருவில் 45 வயது ஐடி ஊழியர் தனது இரண்டு வயது மகளைக் கொன்று ஏரியில் வீசியுள்ளார். மகளுக்கு உணவு வாங்க பணம் இல்லாததால் அவர் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கோலார் தாலுகா கெந்தடி கிராமத்தில் உள்ள ஏரியில் சனிக்கிழமை இரவு இரண்டு வயது குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஏரிக்கரையில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோலார் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஐடி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் குஜராத்தைச் சேர்ந்த ராகுல் பர்மர். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், மனைவியுடன் பெங்களூரு வந்தார். கடந்த ஆறு மாதங்களாக வேலையை இழந்து தவித்துவந்த இவர், பிட்காயின் வணிகத்தில் பணத்தை பறிகொடுத்து உணவுக்கே கடும் சிரமப்பட்டு வந்துள்ளார். அவரும் அவரது மகளையும் நவம்பர் 15 முதல் காணவில்லை. இதையடுத்து அவரது மனைவி பவ்யா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஏரியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

 

Tags :

Share via