குக்கர் விசில் வெடித்து பெண் படுகாயம்

by Staff / 30-11-2022 11:31:53am
குக்கர் விசில் வெடித்து பெண்  படுகாயம்

கேரளாவின் இடுக்கி மாவட்டம் அருகே தேவியார் அரசு மேல்நிலைப்பள்ளி சமையல் ஊழியரான பிரசன்ன குமாரி (52) என்பவர் இந்த விபத்தில் காயம் அடைந்தார். நேற்று காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. திடீரென குக்கர் விசில் வெடித்து பெண் சமையலரின் முகத்தில் பலமாக அடித்தது. மேலும், குக்கர் உள்ளே இருந்த சுடு தண்ணீரும், முகத்தில் பீச்சியடித்து வெந்தது. அடிமாலி தாலுக்கா மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.குக்கர் விசில் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பதோடு, பழைய குக்கர்களை நீண்ட காலம் பயன்படுத்துவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.

 

Tags :

Share via