சென்னை மாநகர பேருந்துகள் இயங்காது" இன்றிரவு அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்,

by Editor / 09-12-2022 02:40:13pm
சென்னை மாநகர பேருந்துகள் இயங்காது

மாண்டஸ் புயல் எதிரொலி - சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிப்பு.
சென்னையில் மட்டும் இரவில் 550  பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று இயங்காது என அறிவிப்பு.

தமிழகத்தில் இன்றிரவு அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்,"கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையை கடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், 3 மணி நேரத்திற்கு பிறகும் பேருந்துகள் இயங்காது"

ஆம்னி பேருந்துகள் இன்றிரவு வழக்கம்போல் இயங்கும்அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிவிப்பு.ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், வார இறுதிநாள் என்பதாலும், பேருந்துகளை இயக்க முடிவு.

 

Tags :

Share via