2400 மைல்கள் மிதந்து வந்த கடிதம்

by Editor / 24-07-2021 08:31:50pm
2400 மைல்கள் மிதந்து வந்த கடிதம்

போர்ச்சுகீஸை சேர்ந்த 17 வயதான இளைஞர் கிறிஸ்டியன் சாண்டோஸ் என்பவர் தனது உறவினருடன் மீன் பிடிப்பதற்காக கடற்கரைக்கு சென்றுள்ளார்.


அப்போது பாட்டில் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. அதில் ஒரு பேப்பர் இருந்தது. அதில் ஆரஞ்சு வண்ண பேனாவினால் குறிப்பு ஒன்று எழுதப்பட்டு இருந்தது.


இது அந்த இளைஞரின் ஆர்வத்தை தூண்ட, பாட்டிலை சரி செய்து அதில் உள்ள பேப்பரை வெளியே எடுத்து படித்துள்ளார்.
அந்த குறிப்பு கடந்த 2018ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரோட் இஸ்லேண்டைசேர்ந்த சிறுவன் எழுதியுள்ளான்.
அதில், “நான் வேர்மொண்டை சேர்ந்தவன். எனக்கு 13 வயது ஆகிறது. இந்த குறிப்பை கண்டு பிடித்தீர்கள் என்றால் messageinabottle201@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தகவல் அனுப்புங்கள்” என எழுதியிருந்தது. 
இந்த சம்பவம் குறித்து கிறிஸ்டியனின் அம்மா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பேப்பரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவித்தும் எந்த தகவலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த பாட்டில் சுமார் 2400 மைல்கள் கடந்து கிறிஸ்டியன் இடம் வந்து சேர்ந்துள்ளது. சினிமா பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via