மார்கழி மாத முதல் நாள் குற்றால அருவிகளில் அலை மோதும் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

by Editor / 16-12-2022 09:17:22am
மார்கழி மாத முதல் நாள்  குற்றால அருவிகளில் அலை மோதும் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் மாலை பெய்த கன மழையின் காரணமாக குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குறிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

அதனை தொடர்ந்து, நீர்வரத்து சீரானதை தொடர்ந்து நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கிய சூழலில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிக்கு வருகை தந்து ஆனந்த குளியல் இட்டு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், மார்கழி மாத முதல் நாளான இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ள சூழலில், தமிழகம் வழியாக சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக குற்றால அருவிகளில் நீராடி செல்வது வழக்கம்.

 அந்த வகையில், இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிக்கு வருகை தந்து புனித நீராடி சென்று வருகின்றனர்.

 இதனால் குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் வருகை தந்த வண்ணம் உள்ளதால் குற்றால அருவிகளில் அளவுக்கு அதிகமான ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் காணப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுகுறு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

 

Tags :

Share via