பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்-திருமாவளவன்

by Editor / 10-05-2022 11:56:01am
பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்-திருமாவளவன்

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார்அப்போது அவர் தெரிவித்ததாவது:

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதைப்போல பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும்,
இலங்கையில் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே சட்டம், ஒரே ஆட்சி என்ற ஒற்றைத் தன்மை நோக்கி ராஜபக்சே குடும்பம் இலங்கையை இழுத்துச் சென்றதால் இலங்கைத்தமிழர் நசுக்கப்பட்டு பன்முகத்தன்மை சிதைக்கப்பட்டது.

 இதே நிலைமை இந்தியாவிலும் மோடி அரசால் வழி நடத்தப்படுகிறது ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே சட்டம் என்ற இலக்கை நோக்கி பாஜக செல்கிறது இந்தியை திட்டமிட்டு திணிக்கிறது எனவே இலங்கையில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவிலும் விரைவில் ஏற்படும் என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ளவேண்டும்.என்றார்.

 

Tags : The old pension scheme should be implemented soon-Thirumavalavan

Share via