விவசாயி சின்னம் கிடைக்குமா? - சீமான் ஆலோசனை

by Staff / 17-02-2024 01:07:57pm
விவசாயி சின்னம் கிடைக்குமா? - சீமான் ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் சென்னை அண்ணாநகரில் நடக்கிறது. இதில், மாவட்ட செயலாளர்கள், வழங்கறிஞர் பாசறை, இளைஞர் பாசறை நிர்வாகிகள், தொண்டர்களுடன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனை நடத்தி வருகிறார். விவசாயி சின்னம் கர்நாடகாவில் உள்ள பாரதிய பிரஜா அய்கியதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், இது பற்றி மேல்முறையீடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயி சின்னம் கிடைக்காத பட்சம், மாற்று சின்னமாக எதை தேர்வு செய்யலாம் எனவும் நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசித்து வருகிறார்.

 

Tags :

Share via