கர்நாடகாவில் 200-க்கும் மேற்பட்ட  கோவில்களில் பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு 

by Editor / 06-10-2021 05:41:53pm
கர்நாடகாவில் 200-க்கும் மேற்பட்ட  கோவில்களில் பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு 

கர்நாடகாவில் 211 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கோவில்களில் பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்த ஒரு அரசு மத அமைப்பு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், எங்கள் இந்து கலாச்சார மதிக்கும் ஆடைகளை பின்பற்றுமாறு பக்தர்களை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். சேலை பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


அது அவர்களது உடலை சரியாக மறைக்கும் வகையில் அணிய வேண்டும். ஆண்களுக்கும் நாங்கள் ஆடைக்கட்டுப்பாட்டை முடிவு செய்கிறோம், என்று ஹரிநாராயண் அஸ்ரன்னா கூறினார். அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு மத அமைப்பு ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தக்ஷிணா கன்னட மாவட்டத்தில் உள்ள கட்டீல் துர்காபரமேஸ்வரி கோயில் மற்றும் பொளாலி ராஜராஜேஸ்வரி கோவிலில் சமீபத்தில் பாரம்பரிய ஆடைகளை கட்டாயமாக்கபட்டது.

 

Tags :

Share via