மனதை மயக்கும் மல்லிகை விலை மக்களை கிறங்ககிறது..

by Editor / 17-12-2022 11:15:19am
மனதை மயக்கும் மல்லிகை விலை மக்களை கிறங்ககிறது..

தென் மாவட்டங்களில் மல்லிகை பூக்களின் விலை உயர்ந்துள்ளதால்சிறுவியாபாரிகள் திணறிவருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் புளியங்குடி தென்காசி ஆகிய மூன்று பகுதிகள் பூக்கள் சந்தைகள் செயல்படும் பகுதிகளாகும்,இதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக தோவாளை மலர் சந்தைக்கு மலர்கள் கொண்டுவரப்படுகிறது. கொள்முதல் விலையில் பூக்கள் வாங்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வருவர். தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து அதிக அளவில் பூக்களை வாங்கி செல்வர். இங்கிருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்து சென்று வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் ஆண்டுதோறும் ஒரு டன் வரை தென்காசி மாவட்டத்தில் மல்லிகை பூ உற்பத்தி நடைபெறும் ஆனால் தற்பொழுது மழை,பனிப்பொழிவு காரணமாக 100 கிலோ வரை தான் மல்லிகைப்பூ உற்பத்தி நடைபெற்று வருகின்றது.இதே நிலைதான்  குமரி மாவட்டத்திலும்தொடர்கிறது. 

இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம், வாகைகுளம், பேரூரணி ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தூத்துக்குடி பூமார்க்கெட்டிற்கு மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், சிவந்திப்பூ உள்ளிட்ட பூக்கள் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.தற்பொழுது மழை,பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.

மேலும் கார்த்திகை 15 ஆம் தேதிக்கு பின்பு கார்த்திகை,மார்கழி, தை 10ஆம் தேதி வரை பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று மாவட்டத்தில் உள்ள மலர் சந்தைகளில் மல்லிகைப்பூ விலை 2500 ரூபாய்க்கும் பிச்சிப்பு விலை 500 ரூபாய்க்கும் கேந்தி பூ விலை 50 ரூபாய்க்கும் சேவல் கொண்ட பூ விலை ₹60க்கும்,அரளி 200 ரூபாய்க்கும்,செய்யப்பட்டு வருகின்றது. மார்கழி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட எந்த வைபோகங்கள் இல்லை என்றாலும் விளைச்சல் கம்மி என்பதால் மல்லிகை பூவின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via