புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து எம்எல்ஏ அறிக்கை

by Staff / 18-12-2022 01:08:56pm
 புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து எம்எல்ஏ அறிக்கை

திமுக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட தி. மு. கழகத்தில், தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அணி அமைப்பாளர்கள் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து மதுரை மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.திமுக கழகத்தின் சார்பு அணிகளான இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, தொண்டர் அணி, விவசாய அணி, மகளிர் தொண்டர் அணி, பொறியாளர் அணி, விவசாய தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, ஆதிதிராவிடர் நல அணி, தொழிலாளர் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு. நெசவாளர் அணி, வர்த்தகர் அணி, மீனவர் அணி, மருத்துவர் அணி மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி, சுற்றுச் சூழல் அணி, அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி, அயலக அணி போன்ற அணிகளுக்கு அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதால் கழகத்தோழர்கள் விருப்பமனு படிவத்தை மாவட்ட செயலாளரிடம் பெற்றுக்கொண்டு மனுவை பூர்த்தி செய்து 22. 12. 2022 அன்று மாலைக்குள் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories