தமிழகத்தில் முதலிடம் பிடித்த நெல்லை பெண்காவலருக்கு தேசிய குற்ற ஆவண காப்பகம் விருது

by Editor / 21-12-2022 07:29:40pm
தமிழகத்தில் முதலிடம் பிடித்த நெல்லை பெண்காவலருக்கு தேசிய குற்ற ஆவண காப்பகம்  விருது

இந்திய  காவல்துறையில் உள்ள வழக்கின் விபரங்களை பதிவேற்றம் செய்து அதனை ஒழுங்குபடுத்தவும் கணினி மூலம் பொதுமக்கள் வழக்கின் விபரங்களை பெறவும் CCTNS வளைதளம் முக்கியமான பிரிவாக  செயல்பட்டு வருகிறது. 

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் கீழ் செயல்படும் இப்பிரிவு மாநிலத்தில் CCTNS-பிரிவில்  சிறப்பாக பணிபுரிந்து வரும் நபர்களை தேர்ந்தேடுத்து அவர்களுக்கு ஆண்டு  தோறும் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதில்   தமிழ்நாடு காவல்துறையில் மூன்று பேர் தேர்வாகியிருந்தனர். அதில் திருநெல்வேலி மாவட்ட குற்றஆவண காப்பகத்தில் CCTNS-ல் பிரிவில்  பணிபுரிந்து வரும் பெண் தலைமைகாவலர் 
தங்கமலர்மதி மாநில அளவில் முதலிடத்தில் தேர்வாகியிருந்தார். இவர் 15.12.2022-ம்‌ தேதி டில்லியில்‌ நடைபெற்ற தேசிய குற்ற ஆவண காப்பக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருதினை பெற்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். 

விருதினை பெற்ற தங்கமலர்மதி  இன்று திருநெல்வேலி காவல் சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சரவணன் ஆகியோரை நேரில் சந்தித்து விருதை வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது  அவர்கள் தங்கமலர்மதியின் பணியினை பாராட்டியும்  இவ்விருது மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தது என்று கூறினார்‌கள். 

இவர் CCTNS- வளைதளம் மூலம் மாநிலத்தில் தேனி,சென்னை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி விருதுநகர்,மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் காணாமல் போன வழக்கில்  அடையாளம் தெரியாமல் இறந்துபோன 26   நபர்களை அடையாளம் கண்டுபிடித்தற்காவும்,திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றும் காணாமல் 19 இருசக்கர  வாகனங்களை   கண்டுபிடித்தற்காகவும் மேலும் பாஸ்போர்ட், Job Verification வந்த மனுக்களில் 28 பேர்களுக்கு வழக்கு உள்ளதை கண்டுபிடித்து   சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பரிசு மற்றும் வெகுமதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதலிடம் பிடித்த நெல்லை பெண்காவலருக்கு தேசிய குற்ற ஆவண காப்பகம்  விருது
 

Tags : திருநெல்வேலி மாவட்ட குற்றஆவண காப்பகத்தில் CCTNS

Share via