மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆதார் அட்டை - சிறப்பு முகாம்

by Editor / 22-12-2022 09:21:09am
மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆதார் அட்டை - சிறப்பு முகாம்

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சிறைச்சாலையாக  மதுரை மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 1200 க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள், பெண் கைதிகள் உள்ளனர்.இந்த நிலையில் இங்கு தண்டனை பெற்று சிறையில் உள்ள கைதிகள் சிலர் ஆதார் அட்டை இல்லாமல் இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து சிறை நிர்வாகம் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடத்தியது. இந்த சிறப்பு முகாமில் சுமார் 60 கைதிகளுக்கு  ஆதர அட்டை பெற விண்ணப்பம் பெறப்பட்டு அவர்களுக்கு ஆதார் அட்டை உடனடியாக வழங்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் உள்ள அனைத்து கைதிகளும் ஆதார் அட்டை உள்ளவர்கள் என்ற புதிய சாதனையும் மதுரை மத்திய சிறை நிர்வாகம் பெற்றுள்ளதாக மதுரை சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo