ஆதாரை இணைக்க மேலும் ஒருமாதம் அவகாசம் நீட்டிப்பு

by Staff / 31-12-2022 01:52:48pm
ஆதாரை இணைக்க மேலும் ஒருமாதம் அவகாசம் நீட்டிப்பு

மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் ஒருமாதம் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். ஜனவரி 31ஆம் தேதிக்குள் மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடமாடும் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும், தமிழகத்தில் இதுவரை 1.60 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via