வாடகை செலுத்தாத எலன் மஸ்க்

by Staff / 02-01-2023 11:31:02am
வாடகை செலுத்தாத எலன் மஸ்க்

டுவிட்டரின் தலைமையகம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஹார்ட்ஃபோர்ட் கட்டிடத்தின் 30வது மாடியில் உள்ளது. எலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கியதில் இருந்து சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்தநிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி தெரியவந்துள்ளது. அதில் சில காலமாக டுவிட்டர் தலைமையகத்தின் வாடகை செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டிடத்தின் உரிமையாளர் சான் பிரான்சிஸ்கோ மாநில நீதிமன்றத்தை அணுகியதாகவும், ட்விட்டரை வாங்கியதில் இருந்து மஸ்க் வாடகை செலுத்தவில்லை என்றும், மொத்தம் 1.36 மில்லியன் டாலர்கள் கடன்பட்டிருப்பதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via