ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்

by Staff / 05-01-2023 12:00:09pm
ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்

அமேசான் நிறுவனம் ஏற்கனவே தனது சில ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனிடையே மீண்டும், அமேசான் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒரே நேரத்தில் 18,000 பணியிடங்களை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், யாரெல்லாம் நீக்கப்படுவார்கள் என்பதை ஜனவரி 18 ஆம் தேதி வெளியிடுவதாக அமேசான் தலைமை நிர்வாகி ஆண்டி ஜேசி கூறினார். அமேசான் நிறுவனத்தில் தற்போது 3 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில், சமீபத்திய முடிவால் 6 சதவீதம் பேர் வேலை இழக்க நேரிடும்.

 

Tags :

Share via