ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்காது .. அதிபர் ஜோ பைடன் 

by Editor / 30-06-2021 08:22:59pm
ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்காது .. அதிபர் ஜோ பைடன் 

 

2018 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு ஒப்பந்தம் காரணத்தால் விலக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை ஈரான் மீது விதித்தார். இதனால் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நிபந்தனைகளில் உள்ள சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் டிரம்ப் ஆட்சிக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி பதவியில் பொறுப்பேற்றுள்ள அதிபர் ஜோ பைடன் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும் ஈரானுக்கு அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் .அவ்வாறு ஈரான் அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் இணைவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்துள்ள இஸ்ரேல் அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு மாறாக ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதற்கு தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே அண்மையில் ஈரான் நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது எதற்காகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பதவிக்காலம் முடிய உள்ள இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லி நேற்று முன்தினம் தனது கடைசி வெளிநாட்டு பயணமாக அமெரிக்காவுக்குச் சென்ற அவர் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இரு தலைவர்களிடமும் நடந்த பேச்சுவார்த்தையில் ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தம் , இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே உள்ள மோதல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையில் அதிபர் ஜோ பைடன் தான் அதிகாரத்தில் இருக்கும் போது ஈரான் நாட்டுக்கு எப்போதும் அணு ஆயுதம் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பிறகு அதிபர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via