பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி உள்பட 5 பேர் கைது

by Staff / 16-01-2023 03:53:13pm
பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி உள்பட 5 பேர் கைது

தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவை சேர்ந்தவர் மகேஷ் பூபதி (23). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் எதிரே உள்ள ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிரே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர் இவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடை உரிமையாளர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாராம்.இந்த நிலையில் சம்பவத்தன்று அன்று இரவு மகேஷ் பூபதி வீட்டில் 5பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தகராறு செய்து அவரது வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்களார். இதில் மகேஷ் பூபதியின் பைக் எரிந்து சேதமானது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தென்பாகம் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.விசாரணையில் தூத்துக்குடி தெற்கு என்பரர் தெருவை சேர்ந்த ரோசாரி மகன் மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் (25), பீட்டர் சர்ச் தெருவை சேர்ந்த கிங்ஸ்டன் மகன் ராபின்சன் (29), அழகேச புரத்தை சேர்ந்த கணேசன் மகன் கண்ண பெருமாள் (22), தெற்கு ராஜா தெருவை சேர்ந்த அன்டோ மகன் ஜான் பிர்ட்டர்ஸ்  (30), சேது ராஜா தெருவை சேர்ந்த கணேசன் மகன் ஹரிஹரன் (24), ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து அரிவாள், பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் மீது 14 வழக்குகள் உள்ளது. இவர் பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo