தை அமாவாசை  முன்னோர்களுக்கு தர்ப்பணம் 

by Editor / 21-01-2023 10:03:42am
தை அமாவாசை  முன்னோர்களுக்கு தர்ப்பணம் 

ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் ஹிந்துக்கள் புனித ஸ்தலங்களில், புனித நீர்நிலைகளில் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் புனித ஸ்தலங்களான ராமேஸ்வரம், பாபநாசம், திருசெந்தூர்,முறப்பநாடு,மற்றும் தாமிரபரணி நதியோடும் ஆற்று நீர் படித்துறைகளிலும் குமரி கடற்கரைகளில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வருகின்றனர்.அதேபோல் குற்றாலத்தில் ஏராளமானோர் புனித நீராடி தங்கள் முன்னோருக்கு எள், அரிசி இரைத்து தர்ப்பணம் செய்தனர்.இந்நிலையில் தற்போது குற்றால அருவியில் நீர்வரத்து உள்ளதால் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.குறைந்தளவு கொட்டும் நீரில் குளித்து சென்றவண்ணம் உள்ளனர்.

தை அமாவாசை  முன்னோர்களுக்கு தர்ப்பணம் 
 

Tags :

Share via