,வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது,- தெலுங்கானா மாநிலஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி  

by Editor / 25-12-2023 09:29:01am
 ,வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது,- தெலுங்கானா மாநிலஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி  

தெலுங்கானா மாநிலஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்துள்ளார் ..அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது அவர் .. ,:-

ஒடிசா ,குஜராத் ஆகிய மாநிலங்களில் வானிலை ஆய்வுமையம் முன்னெச்சரிக்கை குறித்து தகவல் தெரிவித்தவுடன் அந்த மாநிலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா..? மக்கள் காப்பாற்றப் படவில்லையா..? தமிழ்நாடு மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்து இருக்க வேண்டும்.,

திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது..தென் மாவட்டத்தை மாற்றான் தாய் மணப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது..ஆறு- குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை.,மழை நீரை சேமிக்க, எந்த முயற்சி மேற்கொண்டீர்கள்? இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது ,வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது,

.மழை  குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட17,18 தேதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் 17 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடுகிறார்..

முதல்வர் இங்கு வாராமல் கோவைக்கு செல்கிறார்..அங்கு மக்களோடு முதல்வர் நிகழ்ச்சியை விளம்பரத்திற்க்காக நடத்துகிறார்..அங்கிருந்து நேராக  செல்கிறார்..பின்னர் அங்கிருந்து வந்தவர் இங்கு பாதிக்கப்பட்ட  பகுதிகளில் 1மணிநேரம் ஆய்வு மேற்கொண்டுவிட்டு சென்றுவிட்டார்..இந்த பகுதிகள் 1 மணிநேரம் சேதங்களை பார்வையிடும் பகுதிகளா..?பகிரங்கமாக  சாட்டுகிறேன் என்றார்..சென்னையை, இவர்கள் மீட்டெடுக்கவில்லை மக்கள் தானாக மீண்டெழுந்தார்கள். அதேபோன்று இங்கு மக்கள் தானாக மீண்டு வருகிறார்கள்.. அரசாங்க உதவியோடு மக்கள் மீண்டும் எழவில்லை.குளத்தை தூர் வாரினங்களா..இல்லை இவர்கள் வாரினார்களா..?,  என்றார்..மேலும் தாம் தேர்தலுக்காக வரவில்லை என்றும்.மக்களின் வேதனையை அறிந்து அவரக்ளுக்காக வந்துள்ளேன் என்றும் கூறினாா்..

 ,வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது,- தெலுங்கானா மாநிலஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி  
 

Tags : தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி  

Share via