குற்றாலம் சொக்கம்பட்டி ஜமீன் அன்னதானக்கூடத்தில் ஊர்மக்கள் சார்பில் அன்னதானம், திருவிழா  நடத்த முடிவு.

by Editor / 28-08-2023 09:33:48pm
குற்றாலம் சொக்கம்பட்டி ஜமீன் அன்னதானக்கூடத்தில் ஊர்மக்கள் சார்பில் அன்னதானம், திருவிழா  நடத்த முடிவு.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சொக்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான அன்னதான கூடம் உள்ளது குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு சொக்கம்பட்டி ஜமீன் சார்பில் உணவு வழங்குவதற்காக அமைக்கப்பட்டது சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த அன்னதான கூடத்தில் நிர்வகிக்க முடியாமல் ஆலய நிர்வாகம் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மண்டபத்தை மீண்டும் நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக திருக்குற்றாலநாதர் ஆலயம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் அன்னதான சத்திரத்தில் சுமார் 300 ...400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த பழமையான உணவு தயாரிக்கும் செம்பு பாத்திரங்கள் குற்றாலம் பேரூராட்சி நிர்வாக வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வந்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சொக்கம்பட்டி கிராம மக்கள் சார்பில் சொக்கம்பட்டி ஜமீன் குற்றாலநாதர் ஆலயத்திற்கு வழங்கிய அன்னதான சத்திரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்களை மீண்டும் ஒப்படைக்க வலியுறுத்தியும் அந்தப் பொருட்கள் திருடு போனதாகவும் சொக்கம்பட்டி பகுதியில் மாபெரும் போராட்டத்தையும் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சொக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று குற்றாலத்தில் உள்ள சொக்கம்பட்டி அன்னதான கூடத்திற்கு வந்து அங்கு உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். பராமரிப்பு இல்லாமல் பாழடைந்திருந்த அன்னதான மண்டபத்தில் செடி கொடிகளை வெட்டி அகற்றி முதற்கட்டமாக உழவாரப் பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும் வரும் நாட்களில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் திருவிழா காலங்களில் சொக்கம்பட்டி ஜமீன் குற்றாலநாதர் ஆலயத்திற்கு வழங்கிய அன்னதான சத்திரத்தில் மீண்டும் பொதுமக்கள் தங்கி செல்வதற்கும், அன்னதானங்கள் வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொக்கம்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர். இது குறித்து சொக்கம்பட்டி பகுதியைச் சார்ந்த வழக்கறிஞர் ராஜா மறவன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது 1700 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த கல் மண்டபத்தில் பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இங்கு அன்னதானங்கள் வழங்குவதற்காக இருந்த பாத்திரங்களை நகராட்சி நிர்வாகம் திருடிச் சென்றதாகவும் இது குறித்து புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதன் காரணமாக சொக்கம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் ஆலயத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஆலயா  நிர்வாகத்துக்கு ஆதரவாக கிராம மக்கள் செயல்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக உழவார பணிகளை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.... மேலும் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் இங்கிருந்து எடுக்கப்பட்ட பாத்திரங்களை உடனடியாக இந்து அறநிலையத்துறை வசம் பேரூராட்சி நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தமிழகம் தழுவி மாபெரும் போராட்டங்களை நடத்தப்பட உள்ளதாகவும், ஆண்டுக்கு மூன்று முறை வரும் திருவிழாக்களையும் சொக்கம்பட்டி கிராம மக்கள் சார்பாக குற்றாலநாதர் ஆலயத்தின்  ஆறாம் நாள் திருவிழாவை சிறப்பாக நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.

 

Tags : சொக்கம்பட்டி ஜமீன்

Share via