மும்பையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

by Staff / 10-09-2023 01:35:56pm
மும்பையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மும்பையில் பிரசித்தி பெற்ற பாந்திரா மலைமாதா ஆலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி வரும் 17 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் என்பதால் 75 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாந்திரா மலைமாதா ஆலயத் திருவிழாவையொட்டி 287 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

 

Tags :

Share via