ஆலயநிலங்களில் கட்டிடங்கள் வாடகை கட்டாமல் காலம்தாழ்த்திவந்த 4 காலிமனைகள்,3 வீடுகள்,2 கடைகளுக்கு  சீல் வைப்பு. 

by Editor / 28-08-2023 09:27:55pm
ஆலயநிலங்களில் கட்டிடங்கள் வாடகை கட்டாமல் காலம்தாழ்த்திவந்த 4 காலிமனைகள்,3 வீடுகள்,2 கடைகளுக்கு  சீல் வைப்பு. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா பண்பொழி  அருள்மிகு திருமலை முருகன் ஆலயத்திற்கு சொந்தமாக ஏராளமானோர் நன்கொடையாக எழுதி வைத்த பல நூறு ஏக்கர் நிலங்கள் தமிழக கேரள எல்லையான புளியறையில் உள்ளது இதில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களும் மற்றும் கொல்லம்  மெயின் ரோட்டில் ஏராளமான வணிக பயன்பாட்டிற்குரிய காலி மனைகளும் நிரம்பி காணப்படுகின்றன. இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள 13 வீடுகள் மற்றும் கடைகள் சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பில் உள்ள நிலங்களில் பல ஆண்டு காலமாக ஆலய சொத்துக்களை ஆக்கிரமித்து அனுபவம் செய்து வருகின்றனர். இதன் தொடர் தொடர்ச்சியாக சுமார் 13 கடைகள் மற்றும் வீட்டில் வசிப்பவர்கள் திருமலை கோவில் நிர்வாகத்திற்கு ரூபாய் 30 இலட்சத்து 36 ஆயிரத்து 887  ரூபாய் வாடகை பாக்கியாக வைத்துள்ளனர்.ஆலய  நிர்வாகம் சார்பில் அங்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும், தகவல் தெரிவித்தும் இதுவரை உரிய கட்டணங்களை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததை தொடர்ந்து நீதிமன்றத்தின் உடைய உத்தரவுப்படி இன்று தென்காசி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி தலைமையில் தென்காசி ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் பத்மா செல்வகுமாரி முன்னிலையில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இந்து சமய அறநிலைத்துறை ஆலங்குளம் சரக ஆய்வாளர் சேதுராமன் மற்றும் ஆலய பணியாளர்களின் உதவியோடு மேற்படி வாடகைகள் செலுத்தாத பகுதிகளில் சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக பலர் ஆலயத்திற்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கிகளை உடனடியாக சுமார் 3.74 இலட்சத்து 608 ரூபாய் வரை செலுத்தினர், மேலும் மீதமுள்ள பாக்கி தொகைகளை நாளை செலுத்துவதாக சில வீட்டு உரிமையாளர்களும் ,கடை உரிமையாளர்களும் கேட்டுக்கொண்டதால் அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் வாடகை கட்ட முடியாத 4 காலிமனைகள்,3 வீடுகள் இரண்டு கடைகளை  இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால் இலாகா முத்திரையிடப்பட்டு திருமலைக்குமாரசாமி ஆலயத்திற்கு சுவாதீனம் எடுத்துக் கொள்ளப்பட்டது.2கடைகளுக்கு வாடகை கட்டணம் 2.74 இலட்சத்து 608 ரூபாய் உடனடியாக பெறப்பட்டது. ஒருவீட்டுக்கு 4.41.இலட்சம் வாடகை பாக்கியும்,மற்றொரு வீட்டிற்கு 4.36இலட்சம் வாடகை பாக்கியும்  கட்டவேண்டியதில் தலா 50ஆயிரம் ரூபாய் வீதம் 2 வீட்டு வாடகைதாரர்களும் உடனடியாக பணம் கட்டினார்.மீதமுள்ள தொகை நாளை 29 ஆம் தேதிக்குள் காட்டுவதாக உறுதியளித்ததால் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.இன்னும் வாடகை பாக்கியாக 26.இலட்சத்து 62 ஆயிரத்து 279 ரூபாய் வாடகைதார்கள் ஆலயத்திற்கு செலுத்த வேண்டியதுள்ளதாக ஆலய  நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

ஆலயநிலங்களில் கட்டிடங்கள் வாடகை கட்டாமல் காலம்தாழ்த்திவந்த 4 காலிமனைகள்,3 வீடுகள்,2 கடைகளுக்கு  சீல் வைப்பு. 
 

Tags : tirumalaikovil

Share via