இம்மாதம் 30ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

by Staff / 25-01-2023 11:37:43am
இம்மாதம் 30ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்தவுள்ளது. இம்மாதம் 30ஆம் தேதி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார். கூட்டங்கள் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கோரும். எதிர்க்கட்சிகள் நாட்டில் நிலவும் பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோர திட்டமிட்டு வருகின்றன.

 

Tags :

Share via