கட்சித் தாவல் விவகாரம் : நாடாளுமன்றம் தான்  சட்டம் இயற்ற முடியும்’ - உச்ச நீதிமன்றம்

by Editor / 02-07-2021 04:08:26pm
கட்சித் தாவல் விவகாரம் : நாடாளுமன்றம் தான்  சட்டம் இயற்ற முடியும்’ - உச்ச நீதிமன்றம்



சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் ஒரே விதமான நடைமுறைகளை கொண்ட வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கிட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரஞ்சித் முகர்ஜி மனு தாக்கல் செய்தார்
.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.நீதிமன்ற அமர்வின் வாதங்கள்இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் கூறியதாவது: ”கட்சித் தாவல் தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. நீதிமன்றங்கள் அதை செய்ய முடியாது
. எனவே, கட்சித் தாவல், தகுதி நீக்கம் தொடர்பான முடிவுகளை நாடாளுமன்ற, சட்டப்பேரவை சபாநாயகர்கள் உரிய நேரத்தில் எடுக்க வேண்டும். அதை ஆவண செய்யும் விதமான சட்டங்களை மத்திய அரசு விரைந்து இயற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via