ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

by Editor / 31-01-2023 09:56:48am
ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

 ராமநாதபுரம் அருகில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் (06654) ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12.00 மணிக்கு புறப்படும். தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால்  ராமேஸ்வரம் - மதுரை ரயில்கள் இராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. எனவே இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் காலதாமதமாக மதியம் 01.05 மணிக்கு புறப்படும்.

 

Tags :

Share via