மருத்துவமனையை அடித்து மருத்துவர்கள் மீது தாக்குதல்-எட்டு பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

by Editor / 04-02-2023 11:44:02pm
மருத்துவமனையை அடித்து மருத்துவர்கள் மீது தாக்குதல்-எட்டு பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

சென்னை கே கே நகரில் மருத்துவமனையை அடித்து மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்திய மீனாட்சி மருத்துவக் கல்லூரி தாளாளர் மகன் கோகுல் உள்ளிட்ட எட்டு பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை - சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்  5 ஆம்தேதி அதிகாலையில் சென்னை கே கே நகரில் அமைந்துள்ள குரு ராகவேந்திரா மருத்துவமனைக்குள் அதிகாலை நேரத்தில் நோயாளி போல நடித்து மருத்துவமனைக்குள் நுழைந்த கும்பல் மருத்துவர் இளங்கோவனையும், அவரது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கி, மருத்துவமனையையும் சூறையாடி சென்றனர். இந்த தாக்குதல் சம்பவம் முழுவதும் சிசிடிவி  காமிராக்களில் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி உரிமையாளர் ராதாகிருஷ்ணனின் மகன் கோகுல், அலெக்ஸ், அறிவழகன் உள்ளிட்ட 8 பேரை கே.கே. நகர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முத்துக்குமரன் மருத்துவமனையின் டீன் ஆக இளங்கோவன் பணியாற்றி வந்தபோது, கோகுலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்க மாரியப்பன் அளித்துள்ள தீர்ப்பில், கோகுல் உள்ளிட்ட எட்டு பேர் மீதான குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 

மேலும் எட்டு பேருக்கும் சேர்த்து 48 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதில் 30 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மருத்துவர் இளங்கோவனுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். அரசின் சார்பில் சிறப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் காயத்திரி  வழக்காடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளார்.

 

Tags :

Share via