இன்று தைப்பூசம்..

by Admin / 05-02-2023 08:06:37am
இன்று தைப்பூசம்..

தைப்பூசம் முருக பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு புனித விழா.தைப்பூசம் முருகனின் பிறந்த தினமாக  கருதப்படுவதால் தமிழ்கடவுள் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழாக்களில் இது சிறப்பிற்குரியதாகிறது.அதனால்,தை மாதம் பூசம் நட்சத்திரமாகிய எட்டாவது நட்சத்திர நந்நாளில் ,தொன்று தொட்டு குன்று இருக்கும் இடங்களிலெல்லாம் குடிகொண்டிருக்கும் குமர குருவாக இருந்து வல்வினை தீர்த்து வழிபடும் பக்தனுக்கு கண்கண்ட கடவுளாக காட்சி நல்கும் சிவ பார்வதி மைந்தனை  வழிபட பால்குடம்,அலகு குத்தி அரோகரா கோஷத்துடன் அழகென்றசொல்லுக்கு முருகன் என்ற பெயர் கொண்ட முருகனை மனம் உருகி வரும் பொழுது...தைப்பூசம். தருகாசுரனை வதம்செய்த வடிவேலன் தம் பக்தர் துயர் தீர்க்க ஆயுதமெடுத்த போர்க்கடவுள்.  தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியாக பக்தர்களுக்கு ஆணவம்,கன்மம்,மாயை அகன்றிட குருவாக நின்று வழிகாட்டுபவன் .முருகனை வழிபடும் பக்தர்கள் இன்றுஅவனை மகிழ்விக்க. ..சர்க்கரை காவடி,தீர்த்த காவடி,பறவை காவடி,பால் காவடி,மச்ச காவடி,மயில் காவடி எடுத்து வந்துவழிபடும் புனித யாத்திரை தினமே....தைப்பூசம்

இன்று தைப்பூசம்..
 

Tags :

Share via