முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

by Staff / 18-02-2023 02:24:30pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு


தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி கே மணி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.பின்னர், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: எம்பிசி பிரிவில் உள் ஒதுக்கீடு தொடர்பாக குழுவாக சந்தித்துள்ளோம்.

2022 மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. தரவுகள் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எம்பிசி தொடர்பான தரவுகளை 3 மாதத்தில் அரசுக்கு அளிக்க அரசாணை வெளியிட்டிருந்தார்கள். கல்வி, வேலைவாய்ப்பிற்காக முன்னதாக கொண்டு வர கேட்டுள்ளோம்.தமிழ்நாட்டில் தலித், வன்னியர் சமுதாயம் மிகவும் பின்தங்கியுள்ளது. பின்தங்கிய மக்களுக்கு சமூக நீதி வழங்க வலியுறுத்தியுள்ளோம். அரியலூர் மாவட்டத்தில் சோழர்கள் காலத்திலிருந்த பாசனத் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளோம். மாதம்தோறும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் கூட்டத்தை கூட்டி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேறு எந்த அரசியலும் பேசவில்லை. உள் ஒதுக்கீடு கணக்கெடுப்பு என்பது இருக்கும் தரவுகளில் யார் அதிகம் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளார்கள்? மக்கள் தொகை எவ்வளவு என்றுதான் கேட்கப்பட்டுள்ளது. பீஹாரைப் போல ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடத்த வேண்டும். சமூக நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
சித்திரை முழு நிலவு நாள் நிகழ்வுக்கு அனுமதி கேட்டுள்ளோம். எங்களின் கொள்கை 100% வேலைவாய்ப்பில் எந்த சமுதாயத்தினர் எவ்வளவு இருக்கிறார்களோ. அவ்வளவு விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல்?…நாட்கள் உள்ளது, வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்

 

Tags :

Share via