புதிய அறிவிப்பு வாரம் 3 நாட்கள் அலுவலகம் வரவும்

by Staff / 19-02-2023 01:20:42pm
புதிய அறிவிப்பு வாரம் 3 நாட்கள் அலுவலகம் வரவும்

அமேசான் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இனி வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளது. இந்த திட்டம் வரும் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆண்டி ஜெஸ்ஸி கூறுகையில், அலுவலகத்தில் மற்ற ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது நிறைய கற்றுகொள்வதற்கும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கும் சாத்தியத்தை வழங்கும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via