400 ரவுடிகளின் வீடுகளில் சோதனை

by Staff / 21-02-2023 02:31:40pm
400 ரவுடிகளின் வீடுகளில் சோதனை

தமிழக டிஜிபி உத்தரவுப்படி, மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் போக்கிரி சரித்திர பதிவேடுகள் கொண்ட நபர்கள் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க "Action Against Rowdies" என்ற நடவடிக்கையின் மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையின் கீழ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சரித்திர பதிவு கொண்ட ரவுடிகளின் வீடுகளில் கடந்த 05. 02. 2023 ஆம் தேதி முதல் 19. 02. 2023 ஆம் தேதி வரை மொத்தம் 400 ரவுடிகளின் வீடுகளில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த சோதனையில் வாள் -5, கத்தி-2 மற்றும் அருவாள்-1 ஆகியவை கைப்பற்றப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் மீது திருப்பரங்குன்றம், ஜெய்ஹிந்த்புரம், C-1 திடீர்நகர், கூடல்புதூர் மற்றும் அண்ணாநகர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போக்கிரி சரித்திர பதிவேடுகள் கொண்ட பாலாஜி, கார்த்திகேயன் (எ) மெண்டல் கார்த்திக், கருப்பையா (எ) போதகர், சரவணன், நூர்கான், கார்த்திக், விக்னேஷ்வரன். (எ) பெயிண்டர் விக்கி, பழனிக்குமார் மற்றும் மணிகண்டன் (எ) உசிலை மணி ஆகிய 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள எதிரிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை மாநகரில் ரவுகளின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணிக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்து சிறையிலடைக்க காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்திரவிட்டுள்ளார்கள்.

 

Tags :

Share via