மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு.

by Editor / 07-03-2023 09:16:25am
மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு.

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே தனியார் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட  மின்வேலியில் சிக்கி 3 கட்டு யானைகள் உயிரிழப்பு.தாய் யானை உட்பட 3 யானைகள் உயிரிழந்ததை அறியாத இரு குட்டி யானைகள் இறந்துகிடக்கும் யானையின் சடலங்களை சுற்றி சுற்றி வருகின்றன. இதனைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பலாநாயுடு மற்றும் மருத்துவர் பிரகாஷ் குழுவினர் பட்டாசு வெடித்து இரண்டு குட்டி யானைகளை  வனப்பகுதிக்கு விரட்டி இறந்த மூன்று காட்டு யானைகளின் உடல்களை உடற்கூறு பரிசோதனை செய்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : 3 elephants died after getting caught in the electric fence.

Share via