செங்கோட்டையிலிருந்து ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம்.

by Editor / 07-03-2023 10:16:38am
செங்கோட்டையிலிருந்து ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம்.

மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள், பகுதி வாரியாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள், மாற்றுவழியில் இயக்கப்பட்ட ரயில்கள் இன்று 07.03.23 செவ்வாய்கிழமை முதல் வழக்கமான ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.

1. காலை 07.00 மணிக்கு புறப்படும், ரயில் எண். 16848, செங்கோட்டை - மயிலாடுதுறை முன்பதிவில்லாத விரைவு ரயில்
2. காலை 11.30 மணிக்கு புறப்படும், ரயில் எண். 16847, மயிலாடுதுறை - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ரயில்
3. காலை 07.10 மணிக்கு புறப்படும், ரயில் எண். 06504, மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ரயில்
4. மாலை 03.45 மணிக்கு புறப்படும், ரயில் எண். 06503, செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத விரைவு ரயில்
5. காலை 11.50 மணிக்கு புறப்படும், ரயில் எண். 06664, செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத விரைவு ரயில்

6. காலை 11.30 மணிக்கு புறப்படும், ரயில் எண் 06663, மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ரயில் மட்டும் நாளை முதல் (மார்ச் 8ம் தேதி) இயக்கப்படுகிறது

 

Tags :

Share via