பிரபல தொலைக்காட்சி நடிகை சுபி சுரேஷ் காலமானார்

by Staff / 22-02-2023 02:57:05pm
பிரபல தொலைக்காட்சி நடிகை சுபி சுரேஷ் காலமானார்

கல்லீரல் கோளாறு காரணமாக கேரளாவின் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் இன்று காலமானார். ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலை 9.35 மணியளவில் உயிரிழந்தார். கல்லீரல் நோய் காரணமாக சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஜனவரி 28ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திரைப்படம், தொலைக்காட்சி, மைம் என பல தளங்களில் பிரகாசித்த சுபி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் தவிர்க்க முடியாத கலைஞராக இருந்து வந்தார்.

 

Tags :

Share via