தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

by Editor / 23-02-2023 09:52:59am
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via