உலக வங்கி தலைவராகும் அஜய் பங்கா

by Staff / 24-02-2023 11:34:02am
உலக வங்கி தலைவராகும் அஜய் பங்கா

உலக வங்கி தலைவராக டேவிட் மல்பாஸ் இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு முடிவதற்குள் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதையடுத்து மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியா வம்சாவளியைச் ஏர்ந்த அஜய் பங்காவை உலக வங்கியின் அடுத்த தலைவராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இவர், காலநிலை மாற்றம் உள்பட அவசரமான சவால்களை சமாளிக்கும் நபராக இருப்பார் என ஜோபைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via