ஈரோட்டில் இன்று முதல்வர் பிரச்சாரம் 

by Editor / 25-02-2023 09:30:29am
 ஈரோட்டில் இன்று முதல்வர் பிரச்சாரம் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசுகிறார். இதையொட்டி அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக நேற்று கோவை வந்தடைந்தார். அங்கு முதலமைச்சரை, தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் வரவேற்றனர். கோவையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் ஈரோட்டுக்கு வந்தார். இன்று காலை முதல் மாலை வரை அவர் 2 கட்டமாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

 

Tags : முதல்வர் பிரச்சாரம் 

Share via