மீண்டும் பிரதமராகும் ராஜபக்சே

by Staff / 27-02-2023 05:01:58pm
மீண்டும் பிரதமராகும் ராஜபக்சே

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்க வேலைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தகவல் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. அவரை பதவி விலகுமாறு எந்த ஒரு தரப்பில் இருந்தும் கோரிக்கைகளோ, அழுத்தங்களோ கொடுக்கவில்லை என கூறியுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் போராட்டத்தால் ராஜபக்சே பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via