மீனாட்சி அம்மன் கோவில் பார்வதி யானைக்கு உடல்நலக்குறைவு

by Staff / 01-03-2023 03:36:07pm
மீனாட்சி அம்மன் கோவில் பார்வதி யானைக்கு உடல்நலக்குறைவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாக்களில் பயன்படுத்த கடந்த 2000ஆம் ண்டுஅருணாச்சலப்பிரதேசத்தில் இருந்து பார்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டு 26 வயதான இந்த யானை கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டு பார்வதி யானைக்கு இரண்டு கண்களிலும் கண்புரை ஏற்பட்டு வெண்படலம் ஏற்பட்டதன் காரணமாக தாய்லாந்து மருத்துவகுழுவினா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிகிச்சை அளித்தனர். இதனிடையே மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 நாட்களாக நடக்கமுடியாத நிலையில் படுத்த நிலையிலேயே இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
 

 

Tags :

Share via