பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

by Staff / 01-03-2023 03:32:41pm
பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி தண்டாயுதபாணி (வயது 40). இவரது சொந்த ஊர் கொடைக்கானல் பூம்பாறை ஆகும். இவர் கடந்த 12-4-2013-ந் தேதி திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், கொலை முயற்சி செய்தது தொடர்பாக போக்சோ வழக்கு பதிவு செய்து கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் தண்டாயுதபாணியை கைது செய்தனர்.இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் தண்டாயுதபாணி விடுதலை செய்யப்பட்டார். பின் னர் காவல்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது பலகட்ட விசாரணைக்கு பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இதற்காக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின்படி கொங்குநகர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக் டர் கவிதா தலைமையிலான தனிப்படையினர் தண்டாயுதபாணியை சென்னை ஐகோர்ட்டில் நேற்று ஆஜர் செய்தனர். அங்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டாயுதபாணிக்கு 10 வருட சிறை தண்டனை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக விசா ரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கோர்ட்டு விசா ரணையில் உரிய சாட்சியம் சமர்ப்பித்து தண்டனை பெற்றுத்தர பணியாற்றிய கொங்குநகர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி, போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

 

Tags :

Share via