6 வயது சிறுமியை குதறிய தெருநாய்

by Staff / 02-03-2023 01:39:03pm
6 வயது சிறுமியை குதறிய தெருநாய்

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மதரஸாவுக்குச் சென்று கொண்டிருந்த 6 வயது சிறுமி பாத்திமாவை தெருநாய் கடித்துக் குதறியது. சிறுமி கீழே தூக்கி வீசப்பட்டு கடுமையாக கடிக்கப்பட்டார். நாய் தாக்கியதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள், தெருநாய்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். உடனடியாக அவர் அப்பகுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via