காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். இளங்கோவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்போது சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags :