அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்-ஓ.பன்னீர்செல்வம்

by Editor / 07-07-2021 03:59:55pm
அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்-ஓ.பன்னீர்செல்வம்

 தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை எனவும், பாஜக மீதும் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கையை வைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை எனவும், பாஜக மீதும் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கையை வைத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதற்கு பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் பதிலடி அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு, பாஜகவுடனான கூட்டணியே காரணமே என தெரிவித்திருந்தார்.இந்த கருத்து சர்ச்சையான நிலையில், இதற்கு பாஜகவின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் ட்விட்டரில் பதிலடி அளித்துள்ளார்.சி.வி.சண்முகத்தின் ட்விட்டர் கணக்கை Tag செய்து பதிவிட்டுள்ள கே.டி.ராகவன், அதிமுகவால்தான் பாஜக தோற்றது என்ற எண்ணம் தங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுக-பாஜக கூட்டணி சர்ச்சை குறித்து விளக்கமளித்த அவர், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.டி.ராகவன் இடையேயான
பிரச்னை குறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும்.

உள்கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். அதிகாரப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை. இதனால் இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவை தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

.

 

Tags :

Share via