கள்ள நோட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது.

by Staff / 15-03-2023 05:02:15pm
கள்ள நோட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது.

கோவை அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் உக்கடம் அருகே உள்ள ஜே. கே. கார்டன் பகுதியைச் சேர்ந்த முகமது ஹனீபா (வயது 41) என்பவர் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு நின்ற 3 பேர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். எங்களிடம் கள்ளநோட்டுகள் உள்ளன, நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் ஒரிஜினல் நோட்டு கொடுத்தால், அதற்கு 3 மடங்கு கள்ளநோட்டு தருகிறோம். அதனை வைத்து நீங்கள்செலவு செய்யலாம் என ஆசைவார்த்தைகள் கூறினர். தங்களிடம் கள்ளநோட்டு இருப்பதற்கு ஆதாரமாக செல்போன் வீடியோ ஒன்றையும் காண்பித்தனர். அதற்கு முகமது ஹனீபா, நீங்கள் இங்கேயே காத்து இருங்கள்,நான் பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார். நேராக அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை தெரிவித்தார்உடனே போலீசார் உஷாராகி அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்துக்கு சென்றனர். அங்கு முகமது ஹனீபா, பணம் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பில் 3 பேர் கும்பல் காத்து நின்றது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணை யில் அவர்கள் கோவை வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த பிரகாஷ் (47), குன்னூர் நஞ்சப்ப சத்தி ரத்தைச் சேர்ந்த கலைவாசன் (50), மதுரை வில்லா புரத்தைச் சேர்ந்த சண்முக பிரசாத் (36) என்பது தெரியவந்தது. விசா ரணையில் அவர்களிடம் கள்ளநோட்டுஎதுவும் இல்லை என்பதும், வீடி யோவில் கள்ள நோட்டுகளை காண்பித்து பணம் பறிக்க முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via