ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு வந்தது. - அமைச்சர்,எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி. 

by Editor / 18-03-2023 07:48:57am
ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு வந்தது. - அமைச்சர்,எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி. 

 தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரி  மேஜர் ஜெயந்த் அவர்கள் 16/03/2023 அன்று அருணாச்சல  பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்தார்.

அவரது உடல்  அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து டெல்லி கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தது. பின்னர் ஹைதராபாத்தில் இருந்து மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ விமானத்தில் நள்ளிரவு 12.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. 

தொடர்ந்து ராணுவ வீரரின் உடல் மதுரை விமான நிலைய இயக்குனரகம் முன்பு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்,  மாநகர காவல் ஆணையர் நரேஷ் நாயர், மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் மத்திய தொழில் பாதுகாப்பு படை விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு பின்னர் இன்று காலை 6 மணியளவில் ராணுவ வீரரின் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. 

ராணுவ வீரர்  உடலுக்கு  ராணுவ வீரர் அலுவலகம் முன்பு உறவினர்கள் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்வி ஷஜீவான  மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்,உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.அஞ்சலி முடிந்தபின் ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள மயான கரையில் அடக்கம் செய்ய உள்ளனர்.

 

Tags :

Share via