பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட கூடாது

by Admin / 19-03-2023 04:34:34pm
 பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட கூடாது

அ.தி.மு.கவின் பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்தது. அப் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாள ர் பதவிகளை நீக்கி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமித்தது. அதன் காரணமாக நிறைவேற்றப்பட்டதீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் மற்றும் ஜேசிபி பிரபாகர் தொடர்ந்து வழக்கு ஏப்ரல்14 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வந்தன இத்த தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி பன்னீர்செல்வத்தை அணியை சார்ந்த மனோஜ் பாண்டியன் வைத்தியலிங்கம் ஜேசிபி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்  இன்று இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏற்கனவே இது தொடர்பான வழக்கு மார்ச் 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து   ஏப்ரல்  14ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட பின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்  என்றும்  ஏற்கனவே  ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவசர வழக்காக ஏன் பதிவு செய்திருக்றீர்கள் என்றுகேள்வி எழுப்பினார்  .தேர்தல் நடைமுறை தொடரலாம் என்றும்  தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் மார்ச் 22ஆம் தேதி விசாரணை என்றும் மார்ச் 24ஆம் தேதி அன்று இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கபடும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட கூடாது என்றும் உத்தரவிட்டார்

 

Tags :

Share via