ஆன்லைன் மோசடியில் வாலிபர் இழந்த ரூ. 4. 67 லட்சம் பணம் மீட்பு

by Staff / 22-03-2023 02:56:05pm
ஆன்லைன் மோசடியில் வாலிபர் இழந்த ரூ. 4. 67 லட்சம் பணம் மீட்பு

கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனுக்கு கடந்த 2. 3. 2023 அன்று வந்த குறுஞ்செய்தி வந்தது. அதில் இருந்த லிங்கை கார்த்திக் விவரங்களை பதிவு செய்து உள்ளார். அதனை பயன்படுத்தி மர்ம ஆசாமி, கார்த்திக்கின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 2 லட்சம் 78 ஆயிரத்து 500 பணத்தை மோசடியாக திருடி சென்று விட்டாராம். இது குறித்து புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதே போன்று கடந்த 9. 5. 2022 அன்று விளாத்திகுளம் தெற்கு தெருவை சேர்ந்த நாகு மகன் சங்கர் என்பவர், தனது முகநூல் பக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரத்தை பார்த்து அதனுடன் தொடர்புடைய வேலைக்காக ரூ. 40 ஆயிரம் பணம் செலுத்தி உள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தூத்துக்குடி அசோக் நகரை சேர்ந்த பன்வாரிலால் சர்மா மகன் சுசில்குமார் சர்மா என்பவரது வங்கி கணக்கில் இருந்து சுசில்குமார் சர்மாவின் அனுமதியின்றி பல தவணைகளாக மொத்தம் ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 999 எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து புகாரின் பேரிலும் தூத்துக்கு சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மீட்பு தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மோசடி செய்யப்பட்ட ரூ. 4 லட்சத்து 67 ஆயிரத்து 499 பணம் மீட்கப்பட்டது. இந்த பணத்தை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், அதன் உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைத்தார். இது குறித்து புகாரின் பேரிலும் தூத்துக்கு சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மீட்பு தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மோசடி செய்யப்பட்ட ரூ. 4 லட்சத்து 67 ஆயிரத்து 499 பணம் மீட்கப்பட்டது. இந்த பணத்தை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், அதன் உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைத்தார். இது குறித்து புகாரின் பேரிலும் தூத்துக்கு சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மீட்பு தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மோசடி செய்யப்பட்ட ரூ. 4 லட்சத்து 67 ஆயிரத்து 499 பணம் மீட்கப்பட்டது. இந்த பணத்தை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கார்த்திகேயன், அதன் உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைத்தார்.

 

Tags :

Share via