ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்

by Staff / 23-03-2023 02:58:09pm
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர், ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து , பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல்காந்திக்கு எதிராக சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று குஜராத் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது,. இந்த தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக உடனடியாக அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.இதேபோல ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னைசத்தியமூர்த்தி பவனில்  காங்கிரஸ் கட்சியின் மாநிலத்  துணைத் தலைவர் கோபண்ணா  தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

 

Tags :

Share via