வயநாடு தொகுதியில் போட்டியிட தயாராகும் பி.டி.ஜே.எஸ்

by Staff / 26-03-2023 03:32:39pm
வயநாடு தொகுதியில் போட்டியிட தயாராகும் பி.டி.ஜே.எஸ்

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை குறிவைத்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சியான பிடிஜேஎஸ் வயநாடு தொகுதியைக் கோரியுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பிடிஜேஎஸ் வேட்பாளர் போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக டெல்லியில் உள்ள பிடிஜேஎஸ் மாநில தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி, ஜேபி நட்டாவுடன் ஆலோசனை நடத்துவார். 2019 மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் ராகுலை எதிர்த்து துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிட்டார்.

 

Tags :

Share via