இலவசமாக போட்டி தேர்வு நூல்கள்வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தும் சார்நிலை கருவூல அலுவலர்.

by Editor / 27-03-2023 08:57:40am
இலவசமாக போட்டி தேர்வு நூல்கள்வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தும் சார்நிலை கருவூல அலுவலர்.

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் இரண்டில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பயிற்சி பெற்று அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்து வருகின்றனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பொள்ளாச்சி சார் நிலை கருவூல அலுவலர் முத்துக்குமார் மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கி வருகிறார். தற்பொழுது ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள பல்வேறு மத்திய மாநில அரசு போட்டி தேர்வுகளிலாகலந்து கொள்ளும்வகையிலான நூல்களை வழங்கினார். கடந்த முறை நடந்த தேர்வில் 11 பேர் தேர்ச்சி பெற்றனர் இந்த ஆண்டு 9 பேர் டி என் பி எஸ் சி தேர்வு எழுதிய நிலையில் எழுதிய நிலையில் இருவர் வெற்றி பெற்றுள்ளனர் மேலும் மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெற போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக சார்நிலை கருவூல அலுவலர் முத்துக்குமார் நூலகர் மகேந்திரனிடம் வழங்கினார் .அருகில் முன்னாள் நூலகர் கணேசன் உள்ளார் . போட்டித் தேர்வு நூல்களை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தும் சார் நிலை கருவூல அலுவலர் முத்துக்குமாருக்கு நூலக வாசகர் வட்டம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. போட்டி தேர்வு நூல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது  என போட்டி தேர்வுக்கு தயாராகும்  மாணவர்கள் கூறினர்

 

Tags :

Share via