மீனவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

by Staff / 28-03-2023 01:03:25pm
மீனவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி பதவியை நீக்கம் செய்ததை கண்டித்தும், மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் குளச்சல் பீச் ஜங்ஷனில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின் தலமை வகித்தார். துணை தலைவர் லாலின், செயலாளர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழக காங்கிரஸ் செயலாளர் Adv. ஸ்ரீனிவாசன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாறன்ஸ், தமிழக காங்கிரஸ் பொதுகுழு உறுப்பினர்கள் யூசுப்கான், அந்தோனிமுத்து, குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் பிரடி கென்னடி, துணை தலைவர் ஸ்டாலின், உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.

 

Tags :

Share via